நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், நடிகை சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர்களுடைய திருமணம் பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் விமர்சனங்களும் எழுந்தது. அதாவது சங்கீதா பணத்திற்கு ஆசைப்பட்டதன் ரெடின் கிங்சிலியை திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், தனக்கு சமைக்க தெரியாது என்று  திருமணத்திற்கு முன்பே கணவரிடம் கூறிவிட்டதாக சங்கீதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். வீட்டை நிர்வாகம் செய்யத் தெரியாது எனவும், ஜாலியாக சேர்ந்து ஊர் சுற்றலாம் எனவும் கூறியதற்கு கணவர் ஓகே சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எது கேட்டாலும் என் கணவர் இல்லை என சொல்லமாட்டார் எனவும் கூறியுள்ளார்