ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் சத்ரபால் சிங், மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், இவர் 14 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கார் மற்றும் பல விலையுயர்ந்த வாகனங்களை வைத்திருப்பது, ஒருவரின் சம்பளத்தைவிட அத்தனை அதிகம் சொத்துக்களை குவிக்க எப்படி முடியும் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

சத்ரபால் சிங் அரசு வேலைக்கு பதவியில் இருக்கும்போது லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாகவும், இதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பணியாற்றிய ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட், மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் மூலம் சிங் அரசியல் நெருக்கடிகளை எளிதாக்கி, அதிகமாக லஞ்சம் பெற்றுள்ளாரா என்பதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிங் இந்தியாவுக்கு வெளியே ஏதேனும் சொத்துக்கள் வைத்திருக்கிறாரா என்பதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விலை உயர்ந்த கார், பைக்குகளை பறிமுதல் செய்தனர். ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.