ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் காலரா நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் 10 மாகாணங்களில் ஒன்பது மாகாணங்களில் இந்த நோய் பரவி உள்ளதாகவும் உள்ளூர் மைதானங்களில் தற்காலிக சிகிச்சை மையங்களை அரசு அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.