இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் வெற்றிகரமாக 269 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து  அணி தரப்பில்  சோயிப் பஷீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதலாம் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 158 ரன்கள் சேர்த்தார். இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இந்த போட்டியில்  பலதரப்பட்ட சாதனைகளை நமது வீரர்கள் நிகழ்த்தி வருகிறனர். அந்த வரிசையில்  ரிஷப் பண்ட்  சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

148 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
இந்திய அணியின் ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 23 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இது 148 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் ஒரு வெளிநாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமை கொண்டது. இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தென் ஆப்பிரிக்காவில் 21 சிக்ஸர்கள் அடித்திருந்தது.  இந்திய அணியின் இந்த நிலைமை போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது.