
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பெ. முத்துராமலிங்கம். இவர் கட்சியின் பேச்சாளராக இருந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறும் போது முத்துராமலிங்கத்தின் திடீர் மரண செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அன்பு சகோதரர் முத்துராமலிங்கத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரா பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் மூத்த நிர்வாகிகள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு நிர்வாகி உயிரிழந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.