குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி..

2024 ஐபிஎல் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரரான விருத்திமான் சாஹா 11 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக ஆடியது. பின் கேன் வில்லியம்சன் 26 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து சாய் சுதர்சனுடன் கைகோர்த்து ஆடினார் கில்.. அதன்பின் சுதர்சன் (19 பந்துகளில் 33 ரன்கள்)  வெளியேற, மறுமுனையில் கில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 8 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கடைசியில் சுப்மன் கில் மற்றும் ராகுல் தெவாட்டியா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.. சுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 89 ரன்களுடனும், ராகுல் தெவாட்டியா 8 பந்துகளில் (3 பவுண்டரி, ஒரு சிக்ஸ்) 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இதையடுத்து 200 ரன்கள் டார்கெட்டை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒரு ரன்னில் உமேஷ் யாதவின் 2வது ஓவரின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ நன்றாக தொடங்கிய போதிலும் 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 35 ரன்களில் நூர் அகமது சுழலில் சிக்கினார்.

தொடர்ந்து வந்த சாம் கரன் 5 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 15 ரன்னிலும் வெளியேறினர். பஞ்சாப் அணி 12.2 ஓவரின் 111 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. அப்போது களத்தில் நின்ற ஷஷாங்க் சிங்குடன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து ரசித் கானின் 16 வது ஓவரின் முதல் 2 பந்தில் ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. அடுத்து 3வது பதில் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பஞ்சாப் 15.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை 150 ரன்களை சேர்த்திருந்தது.

பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு மெல்ல குஜராத் பக்கம் திரும்பியபோது இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த அசுதோஷ் சர்மா – ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து போட்டியை எடுத்து சென்றனர். இறுதியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டபோது மோஹித் சர்மாவின் 19 ஆவது ஓவரின் 2வது பந்தில் அசுதோஷ் ஒரு சிக்ஸ் மற்றும் கடைசி பந்தில் ஷஷாங்க் சிங் ஒரு சிக்சர் பறக்கவிட, அந்த ஓவரில்  பஞ்சாப் அணி மொத்தம்  18 ரன்கள் சேர்த்தது.

பின் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட தர்ஷன் நல்கண்டே வீசிய முதல் பந்தில் அடிக்க முயன்று அசுதோஷ் சர்மா ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்தார். இம்பாக்ட் பிளேயர் அசுதோஷ் சர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஹர்ப்ரீத் பிரார் உள்ளே வர 2வது பந்தில் வைட் வீசினார். தொடர்ந்து இரண்டாவது பந்து டாட் பாலாக மூன்றாவது பதில் சிங்கிள் எடுத்து,  ஷஷாங்க் சிங்கிற்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட 4 வது பந்தில் ஷஷாங்க் சிங் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் போட்டி டை ஆனது. தொடர்ந்து ஐந்தாவது பந்து அவரது லெக் பேடில் பட்டு கீப்பரிடம் செல்ல ஹர்ப்ரீத் பிரார் – ஷஷாங்க் ஓடி  அணியை வெற்றி பெறச் செய்தனர்.

பஞ்சாப் அணியின் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்ட போதும் ஷஷாங்க் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார். பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியை 3விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி (4 போட்டிகளில் 2 வெற்றி) புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு சென்றது.. அத்துடன் 200 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணி ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக 200+ ஸ்கோரை சேஸ் செய்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன் சேஸ்கள்:

பஞ்சாப் கிங்ஸ் – 6*.

மும்பை இந்தியன்ஸ் – 5.