இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. அதன்படி ஐடிபிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 375 நாட்கள் மட்டும் 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் தொகையை வழங்க அம்ரித் மஹோத்சவ் எஃப்டி என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் சேர செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 7.15 சதவீதம் வட்டிப்பெற்ற வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். அதனைப் போலவே மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் 7.65 சதவீதம் வட்டியும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.