சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 33028 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியகம் நிறுவப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிம்களை முடக்கியுள்ளது.

இவற்றுடன் 3768 ஐ எம் இ ஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளது. இலவச சிம் கார்டு மற்றும் ஒரு மாத அன்லிமிடெட் டேட்டா போன்ற சலுகைகளுடன் கிடைக்கும் சிம் கார்டுகளை வாங்கி பல சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு மோசடிகளை செய்து வருவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.