தமிழ்நாடு பாஜகவில் இருந்து சமீபத்தில் இரண்டாவது முறையாக திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். அவரது நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராக இருப்பதாக கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைமை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது திருச்சி சூர்யா பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்காக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அதன்படி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தன்னை நீக்கியவர்கள் ஏன் தமிழிசையையும் அண்ணாமலையையும் நீக்கவில்லை என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில தலைவரான அண்ணாமலையை விமர்சனம் செய்த தமிழிசை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீதான விமர்சனம் உண்மை என்றால் அண்ணாமலையையும் நீக்கவில்லை. ஆனால் என்னை மட்டும் நீக்கி இருக்கிறார்கள் என்று சூர்யா விமர்சித்துள்ளார்.