தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செபி தலைவர் மாதபி புச் மீது ஹின்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோவை தனது X தல பக்கத்தில் பதிவிட்டுள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியதை நான் வரவேற்கின்றேன்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய கட்சி மாநில தலைவரின் பேச்சை கட்டாயம் கேட்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழு உடனடியாக இதனை விசாரிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.