திமுக தலைவர்களின் ரூ.1.343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை நேற்று அண்ணாமலை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்சிக்கான பில்லையும் வெளியிட்டார். மேலும் கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார். மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் என்னுடைய நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் அண்ணாமலையின் செலவு கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘அண்ணாமலையின் தனிப்பட்ட செலவு (PA வாடகை விமான கார் டீசல்) 2 வருடங்களுக்கு 758,40,00,000. இதுபோக பிறருக்கு கொடுக்கும் லஞ்சம், டிவி, Social Media விளம்பர செலவு எவ்வளவோ?. நண்பர்களுடன் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் எப்படி இதை பெற முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.