
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இன்று ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த ஹீரோயின் குறித்த ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது நடிகர் விஜய் போக்கிரி திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். அப்போது பிரமோஷனுக்காக விஜய் மற்றும் அசின் இருவரும் பேட்டி கொடுத்தபோது அசின் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த ஹீரோயின் நான்தான் என்று கூறினார். அதாவது தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவருக்கு பிடித்த நடிகை நான்தான். வேண்டுமென்றால் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதற்கு நடிகர் விஜயும் சிரித்தபடி ஆமாம் எனக்கு அசினை பிடிக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது பழைய பேட்டியாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருகிறது.