உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகர் சாலையில் குதிரையில் கோட்டு சூட்டுடன் மாப்பிள்ளை அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த வழியாக மினி வண்டியை ஓட்டி வந்த ஒருவர் மணமகனின் கழுத்தில் இருந்த பண மாலையை திருடி கொண்டு தப்பி  சென்றார். உடனே மாப்பிள்ளை அந்த வழியாக சென்ற ஒருவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு குட்டியானையை துரத்தி சென்றார்.

ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து பணத்தை திருடி சென்ற நபரின் வண்டியில் குதித்து பக்கவாட்டு கதவு வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்தார். அதன் பிறகு அந்த டிரைவரை கீழே இறங்க செய்து சரமாரியாக தாக்கி பணமாலையை வாங்குகிறார். அப்போது அவர் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என மாப்பிள்ளையிடம் கெஞ்சுகிறார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.