
பிரபல தொழிலதிபரான லெஜெண்ட சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி இருந்த நிலையில், ஊர்வசி ரவுதாலா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லெஜெண்ட் சரவணனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.6000 கோடி ஆகும். இவரிடம் rolls-royce உள்ளிட்ட பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கிறது. மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.6000 கோடி என தகவல் வெளியான நிலையில் இது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.