மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு உத்தரவின் படி தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை அந்தியோதயா  ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த வருட முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாதம் 2000 டன் வருடத்திற்கு 24 ஆயிரம் டன் ஊட்டச்சத்து கலவை தயாரிக்கும் பணியில் நுகர்வோர் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்  வெள்ளை ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கும் கலப்பட அரிசியில் ஏராளமான சத்துக்கள் உள்ளதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. துத்தநாகம், வைட்டமின் ஏ, பி6, தியாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாஸ் போன்ற சத்துக்கள் சேர்வதால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை சமாளிக்க முடியும் என்று என்ஐஎன் தெரிவித்துள்ளது. இந்த அரிசியை சிலர் சமைக்காமல் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்வதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.