
சென்னை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் பெரியநாயகம் என்பவர் வசித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியநாயகம் உயிரிழந்தார். இந்த நிலையில் பெரியநாயகத்தின் நினைவாக அவரது மகன் லாரன்ஸ் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட கோவிலை கட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் லாரன்ஸ் தனது தந்தையின் 60-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து நலத்திட்ட உதவிகளுடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.