அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் மற்றும் பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லி. இவர் 19 ஆம் நூற்றாண்டில் பிரபலமான நடிகராகவும் பாடகராகவும் இருந்த நிலையில் அப்போது தன் பாடலால் ஏராளமான ரசிகர்களை தன் காலடியில் கட்டிப்போட்டார்.

இவர் கடந்த 1950 களில் மேடை ஏறி பாடும்போது வழக்கமாக ஊதா நிற ஷூக்களை அணிவார். இவர் பயன்படுத்திய காலணிகளை தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். இந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் எல்வினின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த ஷூவை வாங்கினார். அதை 15 ஆயிரம் டாலர்கள் அமெரிக்க மதிப்பில் அவர் வாங்கினார். மேலும் அதன் இந்திய மதிப்பு ரூ.1 1/4 கோடி ஆகும்.