
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவருடைய மகன் தான் பிரபல நடிகர் ராம்சரண். அதன் பிறகு சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து ஹிட்டானது. நடிகர் சிரஞ்சீவிக்கு தற்போது 67 வயது ஆன நிலையிலும் தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் நடிகராக சிரஞ்சீவி தான் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு ரூபாய் 1650 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த பங்களா சுமார் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 30 கோடி செலவில் கட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டில் உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. அதன் பிறகு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நடிகர் சிரஞ்சீவிக்கு சொந்தமான ஏராளமான சொகுசு வீடுகள் மற்றும் நிலங்களும் இருக்கிறது. இவரிடம் ஏராளமான வெளிநாட்டு ஆடம்பர கார்கள் இருக்கும் நிலையில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ள நடிகர்களில் சிரஞ்சீவையும் ஒருவர். மேலும் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இதனால் நடிகர் சிரஞ்சீவிக்கு அதிக அளவில் வருமானம் வருவதாகவும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.