தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு செயலாளராக சபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதாவது சபின் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்றும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர் என்றும் கூறியதோடு அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் பதவி வழங்க பணம் கேட்கப்படுவதாகவும் ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் தற்போது ரவுடி ஒருவருக்கு பதவி வழங்கியுள்ளனர் என்று சர்ச்சை வெடித்துள்ளது.