
அதிமுக கட்சியின் ஈரோடு மாநகர் முன்னாள் துணை செயலாளர் வி.கே ராஜு உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 2 அதிமுக நிர்வாகிகள் மரணமடைந்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் மலைச்செல்வம் என்பவர் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சிவகங்கை மாவட்ட அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் பிரேம்குமார் பிரித்விராஜ் என்பவரும் காலமானார். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நிர்வாகிகள் மரணத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.