பீகார் மாநிலத்தில் ஒரு விரைவு ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கீழே நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் அங்கிருந்த தண்ணீர் குழாயிலிருந்து திடீரென குழாயை வெளியே எடுத்தார். பின்னர் அந்த பைப் மூலம் அவர் ரயில் சென்று கொண்டிருக்க வாசலில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் எதற்காக அப்படி செய்தார் என்ற காரணம் தெரியவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். சிலர் கோமாளி என்று விமர்சித்துள்ள நிலையில் சிலர் இது போன்ற செயல் ஏற்க முடியாதது என்று கூறுகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.