ஐபிஎல் 2025 போட்டியில் பந்து வீச்சாளர் அர்ஷத் கான் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததை அடுத்து, விராட் கோலியின் ரசிகர்கள் நடிகர் அர்ஷத் வார்சியின் இன்ஸ்டாகிராமில் தவறுதலாக கருத்துகளை வெளியிட்டனர். ஏப்ரல் 2 புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நட்சத்திரம் விராட் கோலியை அர்ஷத் கான் அவுட்டாக்கினார் . இதனையடுத்து கிரிக்கெட் வீரர் அர்ஷத் கானுக்கு பதிலாக ஹிந்தி நடிகர் அர்ஷத் வர்ஷியின் instagram போஸ்டிற்கு கீழே அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்துள்ளார்கள்.

கோலியின் ரசிகர்களில் ஒரு பகுதியினர் இந்திய நட்சத்திர வீரரை வெளியேற்றிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களின் பெயர்களைக் குறிவைப்பது இது முதல் முறை அல்ல.  பலமுறை நடந்துள்ளது. இதற்கு முன்பாக சாம்பியன் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோலி அடித்த பந்த கேட்ச் பிடித்த க்ளோன் பிளிப்ஸ்க்கு பதில் Philips நிறுவனத்தின் பதிவில் கமெண்ட் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.