
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நௌதன்வா நகரில் மரபுப் பழக்கமாகச் தொடர்ந்து வரும் ஒரு விசித்திர நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. பாஜகவின் முன்னாள் நகராட்சித் தலைவர் குட்டு கான் என்பவரை, உள்ளூரில் உள்ள சில பெண்கள் கூடி அவரது வீட்டுக்கே வந்து சேற்றில் முழுக்க முழுக்க நனைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், பாஜக தலைவர் குட்டு கான் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, அவருடைய கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டன. பின்னர் பெண்கள் ‘கஜ்ரி’ எனப்படும் பாரம்பரிய பாடல்களைப் பாடிக் கொண்டே பல வாளிகளில் சேற்றை கொண்டு வந்து அவர் மீது ஊற்றினர். தலை முதல் கால் வரை சேற்றில் நனைந்த பாஜக தலைவர் தரையில் வீழ்த்தப்பட்டும், பெண்களின் செயல்களுக்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
यूपी में BJP नेता गुड्डू खान के हाथ-पैर बांध कीचड़ से नहलाया…बेबस नेता सहता रहा महिलाओं की कारगुज़ारी!#BJP #UttarPradesh #viralvideo #NewsUpdate pic.twitter.com/otdcOEVFUZ
— Article19 India (@Article19_India) June 30, 2025
இதன் பின்னணியில் ஒரு நம்பிக்கையே காரணம். அந்த பகுதியில் மழை பெய்யாத காலங்களில், மிகவும் பிரபலமான ஒருவர் இவ்வாறு சேற்றில் நனைய வேண்டும் என்ற பழக்கம் இருக்கிறது. இது செய்தால், ‘இந்திர தேவ்’ திருப்தியடைந்து அந்த பகுதியில் மழை பொழிவார் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த மரபு, சுமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து கூறிய குட்டு கான், “இந்த பாரம்பரியம் நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒன்று. இதுபோல செய்தால் மழை நிச்சயமாக பெய்யும் என்பதே நம்பிக்கை. நானும் அதை தொடர்ந்தேன். இந்திர தேவ் மகிழ வேண்டி இது செய்வது. இதில் எந்த அவமானமோ, வெறுப்போ இல்லை,” என்றார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில், சிலர் இதை பாரம்பரியமாக பாராட்டினாலும், சிலர் மனித மரியாதைக்கு எதிரான செயலாக கண்டிக்கின்றனர். இருப்பினும், அந்த பகுதியில் வாழும் மக்கள் பெருமளவில் இதை ஒரு நம்பிக்கையான விழாக்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.