இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் அஞ்சலகத் திட்டங்களில் தான் பணத்தை  சேமித்து வருகிறார்கள். அஞ்சலக திட்டம் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அணுகக்கூடிய வகையில் விதத்தில் மிகவும் எளிமையான டெபாசிட் தொகை மற்றும் தொகை முதிர்வு காலம் ஆகியவை ஒப்புக்கொள்ளும் விதமாக உள்ளது. இதில் இன்னொரு பலன் என்னவென்றால் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் நல்ல வட்டி வீதமும் வழங்கப்படுவதால் சிறந்த நிதி ஆதாரமாகவும் இருக்கிறது.

இதில் ஒன்று முக்கியமான திட்டம் தான் டைம் டெபாசிட் திட்டம். இதில் 7.5% வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் வருடத்தை பொறுத்து மாறுபடும். அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு  2 லட்சம் வரை வட்டி தொகையாக கிடைக்கும். முதிர்வு  காலத்தில் ஏழு லட்சம் வரை தொகை கிடைக்கும்.