மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசுகளும் பின்பற்றி வருகிறது. தற்போது வரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பள உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதலே முன் தேதியிட்டு அமலாக இருப்பதால் 5 மாதத்திற்கான அரியர் தொகையும் சேர்த்து கிடைக்க இருக்கிறது. அதோடு, தீபாவளிக்கு முன் சம்பள உயர்வுடன் மொத்தமாக சம்பளம் கைக்கு கிடைக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்