உத்திரபிரதேசம் மாநிலத்தில் படித்துவிட்டு தற்போது வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்று பயனடையும் விதமாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்கள் திறனை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பில் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் முனைவோர்களுக்காக மாநிலத்தில் தற்போது தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு உதவி தொகையாக மாதம் 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ பயன் இளைஞர்கள் மட்டுமல்லாமல் இந்த தொழிற்பெயர்ச்சி திட்டத்தில் பட்டதாரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வரும் ஆண்டில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்பெயர்ச்சியின் பலன்களை பெறுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.