தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை காட்டிலும் தரமான கல்வி, வசதியான வகுப்பறை,சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம் பிரத்தியேக உள்கட்டமைப்புகளுடன் உத்தரபிரதேச மாநில அடிப்படை கல்வி கவுன்சிலின் கீழ் 9 பள்ளிகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.