
குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி அஜித் குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்ட அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் அஜித்குமாருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.