பிரபல நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அஜித் கார் ரேசிங்கில் ஆர்வம் காட்ட தொடங்கினார். இவர் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸ்ங்கில் தீவிரம் காட்டி பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அஜித் தனது சொந்த பந்தய அணியான “அஜித் குமார் ரேசிங்”கை உருவாக்கினார்.

இந்த அணியின் மூலம் அஜித் குமார் இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார். இந்த ஆண்டு துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்சலின் முகெல்லோ கார் பந்தயத்திலும், ஐரோப்பாவில் நடைபெற்ற ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில் “அஜித்குமார் ரேசிங்” என்ற பெயரில் நடிகர் அஜித் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

இந்த சேனல் அஜித்குமாரின் கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாக வைத்து இயங்க உள்ளது. அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் இதில் பகிரப்படும் என கூறப்படுகிறது. யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17,000 பேருக்கும் மேற்பட்டோர் அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.