செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வங்கியில் உங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளுங்கள். அக்டோபர் 1ஆம் தேதி முதல் உங்களது ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது. செல்லாக்காசாக மாறிவிடும்.

எல்பிஜி சிலிண்டர் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. சமையல் கேஸ் விலையில் மாற்றம் வரும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.  பொதுவாக, விமான எரிபொருள் (ATF) விலையும் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மாறும். இந்த முறையும் CNG-PNG உடன் ATF இன் விலையில் மாற்றம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறைகள் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைப் பாதிக்கலாம்.. இது தவிர, மாநிலங்களைப் பொறுத்து சில உள்ளூர் விடுமுறைகள் மாறலாம்.

செப்டம்பர் 30க்குள் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.  பிபிஎஃப், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் மற்றும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றை ஆதாருடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அக்டோபர் 1 முதல் உங்கள் கணக்கு முடக்கப்படும். அதாவது, உங்கள் கணக்கில் இருந்து எந்த விதமான பரிவர்த்தனைகளையும் டெபாசிட்களையும் செய்ய முடியாது. எனவே, உங்கள் நிதி பரிவர்த்தனைகளை சரியான நேரத்தில் ஆதாருடன் இணைப்பது முக்கியம்.