குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவை குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் பெரும்பாலும் சமைத்து மீதமான உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சாப்பிடுவோம். ஆனால் எந்தெந்த உணவுகளை எவ்வளவு கால அளவில் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதன்படி சமைத்த அரிசியை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு நாளுக்குள் சாப்பிட வேண்டும். கோதுமை ரொட்டி தயாரித்த 12 முதல் 14 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். எஞ்சி இருக்கும் பருப்பை கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டாமல் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்திருக்கலாம். நறுக்கிய பழங்களை குளிரூட்டினால் 6 மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள்.