இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடனங்கள் ஆடுவதற்கு என தனியாக நடிகைகள் இருந்தார்கள். அதன்படி சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா ஆகியோயர் கவர்ச்சி நடனங்கள் ஆடுவதில் தமிழில் பிரபலமான நடிகைகள். முன்பெல்லாம் ஹீரோயின்கள் படங்களில் நடிப்பதோடு சரி. மற்றபடி கவர்ச்சி நடனங்கள் ஆட மாட்டார்கள். ஆனால் தற்போது காலம் மாற மாற மாற ஹீரோயின்களும் கவர்ச்சி நடனங்கள் ஆட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தற்போது ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதேபோன்று பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.2 முதல் ரூ.3 கோடி சம்பளமும், நடிகை சன்னி லியோன் 1 முதல் 1.5 கோடியும், நடிகை நேரா பதேஹி ரூ.5 கோடியும், நடிகை தமன்னா ரூ.3 கோடியும், நடிகை மலைக்கா அரோரா ரூ.1 முதல் ரூ.1.5 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள். மேலும் நடிகைகள் வெறும் 5 நிமிட பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.