தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாகசைய்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர்.

அப்போது நடிகை சமந்தாவுக்கு  தன் முன்னாள் கணவர் 250 கோடி ஜீவானம்சம் கொடுத்ததாகவும் அதை நடிகை சமந்தா வாங்க மறுத்ததாகவும் தகவல்கள் பரவியது. இது தொடர்பாக நடிகை சமந்தா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை சமந்தா 250 கோடி வாங்கியுள்ளதாக தூங்கி எழுந்தவுடன் ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். இதைக் கேட்டவுடன் நான் மிகவும் வருத்தமானேன். மேலும் வருமான துறையினர் வந்து கேட்டால் என்னிடம் எதுவுமே இல்லை என்பதை அவர்களிடம் காட்டுவதற்கு தயாராக இருந்தேன் என்று கூறியுள்ளார்.