200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பரிசு பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகேஷ் மோசடி செய்தது தெரிந்தும் ஜாக்லின் அவர் கொடுத்த பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என கூறியிருந்தது. இது தொடர்பாக நடிகை ஜாக்லின் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்துள்ளார். கடந்த மாதம் 12-ஆம் தேதி 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நடிகை ஜாக்குலின் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நடிகை ஜாக்லின் ஆஜராகியுள்ளார்.