கழுத்து வலி காரணமாக விராட் கோலி, முழங்கை பிரச்சனை காரணமாக கே.எல் ராகுல் ஆகியோர் எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ விதிமுறையால் கில், பண்ட், ஜடேஜா ஆகியோர் ரஞ்சி போட்டியில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.