தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் கவுதம் மேனன். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. அதேபோன்று அடுத்ததாக இவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் அண்மை காலமாக கச்சேரிகள் நடத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன்படி, ஹரிஷ் ஜெயராஜ் கச்சேரி நடந்துள்ளது. இந்த கச்சேரியில் இயக்குனர் கவுதம் மேனன் பங்கேற்றார். அப்போது ஹாரிஸ் இசையமைத்த அனேகன் திரைப்படத்திலிருந்து டங்கா மாறி பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டார் கவுதம் மேனன். அந்த வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.