பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கு தன்னுடைய கணவர் வில்லியம்ஸ் பல உதவிகளை செய்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் என் கணவரின் இறப்புக்கு கூட வரவில்லை எனவும் சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, மம்முட்டி வீட்டுக்கு வந்தால் அம்மா செய்ததை சாப்பிடுவார். இதேபோன்று மோகன் லால் கேரியரில் உணவைக் கொண்டு செல்வார். ஒருமுறை என்னுடைய நகைகளை விற்றுக் கொண்டு மோகன்லாலுக்கு பணம் கொடுத்தேன். அப்போது நான் 9 மாத கர்ப்பமாக இருந்தேன். அதையெல்லாம் அவர் மறந்துவிட்டார். மோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே கிடையாது. ஒரு காலத்தில் கஷ்டத்தில் இருந்தபோது யாரும் என் கணவருக்கு உதவவில்லை. மேலும் ஒரு முறை என்னை ஏர்போர்ட்டில் பார்த்துவிட்டு மோகன்லால் ஓடிப் போய்விட்டார் என்று கூறியுள்ளார்.