சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பயங்கரமாக ட்ரெண்டாகி வரும் பாகிஸ்தான் ரயில்வேயின் புதிய ‘பிரிமியம் கோச்’ விளம்பர வீடியோ, சர்வதேச அளவில் பாராட்டைப் பெறுவதற்குப் பதிலாக சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் ட்ரோலிங் அலையையுமே கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், “பாகிஸ்தான் ரயில்வேயின் புதிய பிரிமியம் கோச்சுகள் விரைவில் வருகின்றன!” என்கிற பந்தாவான கேப்ஷனுடன் ஒரு சொகுசு ரயிலின் உட்புறக் காட்சிகள் மற்றும் நவீன வசதிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டிருந்தது.
New Premium Coaches of Pakistan Railways Coming Soon! pic.twitter.com/VU2SeR1Uo6
— Pakistan Railways (@PakrailPK) June 30, 2026
ஆனால், அந்த வீடியோவை உற்றுப்பார்த்த உலகளாவிய நெட்டிசன்கள், அது நிஜமாகத் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி அல்ல என்றும், முழுக்க முழுக்க ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான கிராபிக்ஸ் வீடியோ என்றும் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.
இந்த ஏஐ மோசடி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தற்போதைய மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழலை முன்வைத்து நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் தாறுமாறாகப் பங்கம் செய்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “ஏஐ மூலமாக இப்படி ஒரு சொகுசு வீடியோவை உருவாக்குவது ரொம்ப சுலபம், ஆனா நிஜத்துல இப்படி ஒரு ரயிலைக் கொண்டு வர்றது பாகிஸ்தானால முடியாத காரியம்” என்றும், மற்றொருவர் “பாகிஸ்தான் பாதுகாப்பு இருக்குற லட்சணத்துக்கு இந்த சொகுசு ட்ரெயின் வந்தா முஜாஹிதீன்கள் வந்து இதைக் கடத்திடப் போறாங்க” என்றும் அராஜகமாகக் கிண்டலடித்துள்ளனர்.
மேலும் சிலர், “இன்றளவும் மணிக்கு வெறும் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களை வச்சுகிட்டு இப்படி மெகா கனவு காணலாமா?!” என்றும், “இந்த ரயிலில் டிக்கெட் வாங்க பாகிஸ்தானியர்கள் தங்களது கிட்னியையே விற்க வேண்டியிருக்கும் போல!” என்றும் தங்களது மெகா நையாண்டியை அள்ளி வீசி வருகின்றனர்.
