அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசான புஷ்பா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் ஒரு வழக்கு அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி தந்தது.
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அல்லு அர்ஜுன் ஒய்.எஸ்.ஆர் வேட்பாளர் சந்திர கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நந்தியாலாவின் ரசிகர்களை சந்தித்தார். அது தேர்தல் விதிமீறல் என வழக்கு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து அல்லு அர்ஜுனை விடுவித்து ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.