உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தினம்தோறும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருவதால் தினம் தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பல புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிரபல சாட்டிங் நிறுவனமான whatsapp தற்போது மீண்டும் ஒரு வசதியை கொண்டு வர உள்ளது.
ஒரு நாளில் மறையக்கூடிய மெசேஜ்களையும் சேவ் செய்து வைக்கும்படியான அம்சத்தை கொண்டு வர வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறிப்பிட்ட மெசேஜ்களை keep option ஐ கிளிக் செய்து சேவ் செய்யலாம். அவற்றை keep message இல் பார்த்துக் கொள்ளலாம் எனவும் விரைவில் இதன் அப்டேட் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.