மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் மற்றும் மரியான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பார்வதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது பூ படத்தில் நடித்த போது தனக்கு சரியாக தமிழ் வராததால் மற்றவர்களை படிக்க சொல்லி கேட்டு அதற்கு தகுந்தார் போன்று நடித்ததாக கூறினார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைந்தால் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்றார். அதாவது சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாகவே தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்ததாம். குறிப்பாக டீக்கடை வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். எந்த தொழில் செய்தாலும் அதில் மரியாதை என்பது மிக முக்கியம் என்பதால் அதற்கு தகுந்தார் போன்று தான் தொழில் செய்ய வேண்டும். அதேபோன்று சினிமா துறையிலும் மரியாதை ரொம்ப முக்கியம். மேலும் அந்த மரியாதை எனக்கு கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்று கூறினார்.