பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது. வணங்கான் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் வருகிற 2025-ஆம் ஆண்டு பொங்கல் முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்துள்ளது. பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி, விக்ரமின் வீர தீர சூரன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.