பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் விருந்தாக வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகப்போவதாக நடிகை ராஷ்மிகா ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது 2022-ம் ஆண்டு முடிவடைய போகும் நிலையில் கடைசி நாளன்று நடிகை ராஷ்மிகா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜனவரி 11-ம் வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என்று ராஷ்மிகா கூறினார். அதோடு இந்த படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்று ராஷ்மிகா கூறினார். மேலும் இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram