தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வருடம் நடிகர் பார்த்திபன் 3 படங்களை இயக்கப் போவதாக அறிவித்ததோடு அதன் தலைப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மரணம் அடைந்து விட்டதாக ஒரு youtube சேனலில் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த செய்திக்கு நடிகர் பார்த்திபன் தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, நொடியில் மரணம் அடைவதும், அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதன் காரணம் தெரியவில்லை. நெகட்டிவ் செய்திகளை பரப்புவதற்கு இதுபோன்று சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் பரப்புவோம். மக்களுக்காக பரப்புவோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் பார்த்திபன் இறந்து விட்டதாக வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.