பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் நிலையில் நடிகர் சத்யராஜ் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் சத்யராஜ், தந்தை பெரியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.