பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. புதிய படமான இன்ஸ்பெக்டர் அவினாஷ் ஷூட்டிங்கின் போது குதிரை மேல் இருந்து தவறி விழுந்தவர். மும்பையில் இருக்கும் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இப்போதைக்கு முழு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இடதுகாலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது.