தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாஜக வெற்றி பெறாத நிலையில் அண்ணாமலையின் தலைவர் பதவியும் பறிபோகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.