முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் நேற்று தனது 56-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை ஏ.ஆர் ரகுமான் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை இந்த தளத்தில் வெளியிட உள்ளார்.

இந்த தளம் டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும். இந்நிலையில் கலைஞர்கள் தங்களது படைப்புகளை பட்டியலிடமும், பணமாக்கவும் இது உதவுகிறது. அதாவது இசை கலைகள் போன்றவற்றை நேரடியாக பயனர்களுக்கு வழங்குகிறது. கூடிய விரைவில் பல சர்வதேச தரத்திலான படைப்புகளும் இந்த தளத்தில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.