சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதுகிறது.  இந்த நிலையில் ஊட்டியில் நடைபெற்ற சூரியா 44 திரைப்படத்தின் சண்டைக்காட்சி படபிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகின்றது.