தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுக்கு கண்டம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை, நாமக்கல், திருச்சி, தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  இதேபோன்று கடலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.